Wednesday, January 5, 2011

லச்சியங்களும் பயணங்களும்...............

நம் மாணவர் சமுதாயத்தில் இன்று கனவு காணும் இளைங்கர்கள் பலர் இருந்தாலும் அந்த கனவுகள் சொல்லும்படி பெரிய குறிக்கோளை கொண்டதோ அல்லது ஒரு பெரிய இலச்சியத்தை அடைவதாக இருக்கும் படியாக எனக்கு தோன்றவில்லை. என் சக நண்பர்கள் பலருக்கு லச்சியம் செட்டில்(settle) ஆவதாம். அந்த செட்டில் என்ற ஆங்கில வார்த்தைக்கு அவர்கள் கொடுக்கும் விளக்கம் நீண்டு கொண்டே போனாலும் இதன் சாராம்சம் 'எந்த வித அக்கரயும் யார் மீதும் இல்லாமல் தானும் தன் குடும்பமும் மகிழ்ச்சியாக இருப்பது'. என்னே அற்புதமான கனவு, தீரிய சிந்தனை என்பதை நாம் உணரலாம்.

இதற்க்கு காரணம் சூழ்நிலை என்று பலர் சொல்வதை நான் கேட்டேன் அதாவது சூழ்நிலை காரணமாக சுயநலமாக இருக்கிறார்களாம் என்னே ஒரு அற்புதமான விளக்கம். உண்மையில் இவர்கள் பாடத்தை தவிர மற்ற புத்தகங்களையோ, செய்தித்தால்கலையோ படிக்க நினைப்பது கூட இல்லை. இதனால் மாணவர்கள் கிணத்து தவளைகள் போலவே இருக்கிறார்கள். காக்கைக்கும் குருவிக்கும் கூட வித்யாசம் தெரியாத அளவுக்கு. மீடியா குறிப்பாக இன்றைய தமிழ் சினிமாக்கள் இயன்றவரை மாணவர்களை சீரழிக்கிறது. "சில்லினு ஒரு காதல்" என்ற படம் இது போன்ற உயர்ந்த குறிக்கோள்களை(settle) மாணவர்களுக்கு விதைத்தது.
நம்பிக்கை வரட்சியில் வாடும் நம் மாணவர்களுக்கு செட்டில் ஆவது ஒரு பெரிய சாதனையாகவே தெரிகிறது. அப்படி செட்டில் ஆன பின் அமெரிக்க, இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு போய் வந்து விட்டால் அது ஒரு பாரதரத்னா விருது வாங்கியதற்கு சமமாக எண்ணுவார்கள். இப்படி சிந்திக்கும் மாணவர்களால் யாருக்கும் எந்த வித பயனும் இல்லை.

குறிக்கோள் போகட்டும் இவர்களின் பொழுது போக்கு பற்றி சொல்லியே தீரவேண்டும். Facebook, Farmville என்ற அறிவு சார்ந்த செயல்களில் பொழுது முழுவதயும் போக்குவது. Farmville என்பது ஒரு வேளாண்மை செய்யும் விளையாட்டு. நான் பார்த்த வரையில் இது விளையாடும் அனைவரும் ஆடு, மாடு, பன்றி என்று கணினியில் வகை வகையாக மேய்க்கிறார்கள். இவர்களின் பெற்றோர் ஆடு, மாடு மேய்த்து பையன் சிரமப்படக்கூடாது என்று தான் கல்லூரியில் சேர்த்தார்கள் ஆனால் இவர்கள் கல்லூரியிலும் பன்றி வரை மேய்ப்பது வருந்தத்தக்கது. இதில் என்னை வேறு பலர் அழைத்த(request) வண்ணம் இருக்கிறார்கள் அவர்களுக்கு என் பதில்,"நண்பர்களே நான் கல்லூரிக்கு படிக்க வருகிறேன் பன்றி மேய்க்க அல்ல". இப்படியும் பொழுது போகவில்லை என்றால் ஒருவரை தேடி பிடிப்பார்கள். ஒருவன் கிடைத்துவிட்டால்(நகைக்க) இவர்களுக்கு சக்கரை சாப்பிட்டதற்கு சமம் ஏதாவது ஒன்று அவனை பற்றி பேசி பொழுதை ஓட்ட வேண்டும். குறிப்பாக ஏதாவது ஒரு சமூக சிந்தனை உள்ள மாணவன் எதாவது சொல்லமாட்டானா என்று பனங்காட்டு நரி போல பார்த்துக்கொண்டே இருப்பார்கள் எதாவது சொல்லிவிட்டால் போதும் அன்றைய பொழுது அவன் விளையாட்டுப்பொருள் தான்(எனது அணுபவம்).

"உள்ளத்தனையது தான் உயர்வு" நினைப்பதாவது உயர்வாக நினையுங்கள். பிறகு அதற்கு ஏற்ப உயர்வு இருக்கும். செட்டில் ஆவது ஒரு குறிக்கோளோ லட்ச்சியமோ அல்ல. படித்துத்தான் செட்டில் ஆக வேண்டும் என்பதில்லை. படிக்காமல் வாழும் அனைவரும் செட்டில் ஆகவில்லையா என்ன. உணவு உடை இருப்பிடம் இவை சரியாக கிடைப்பது செட்டில் என்ற வார்த்தைக்கு சரியான பொருளாகும். ஆகையால் எதாவது சாதிக்க வேண்டும் என்று கனவு காணுங்கள். செட்டில் ஆவதை ஒரு லச்சியமாகவே கொண்டிருக்காதீர்கள். இந்த இலச்சியத்தை கையால் ஆகாதவர்கள் மட்டுமே கொண்டு இருப்பார்கள் ஆகையால் இந்த லச்சியம் நமக்கு துளிகூட பொருந்தாது.



1 comment: