Tuesday, December 28, 2010

விநாயகர்...........

விநாயகர் கோயில் இந்தியாவில் மக்கள் வசிக்கும் வீடுகளின் எண்ணிக்கையை விட அதிகமாகவே இருக்கிறது. இதற்கு காரணம் விநாயகரின் சக்தி தான் என்று பல பூசாரிகள் தெரிவித்தனர். இந்த கதையை கேட்டவுடன் நானும் விநாயகரின் பரம பக்த்தன் ஆகி விட்டேன். இந்திய வரலாற்றில் முதல் முறையாக இந்த கதை இதோ

விநாயகரின் சக்தி:
விநாயகருக்கு மிகவும் பிடித்தது கொழுக்கட்டை தான். அவர் டயட்டில் இருந்தாலும் கூட கொழுக்கட்டை தான் சாபிடுவாரம். அதனால் தான் இந்த கொழுக்கட்டையை விநாயகர் சதுர்த்திக்கு கூட அதிக அளவில் செய்து விநாயகருக்கு கொடுக்கிறார்கள். இந்த கொழுக்கட்டை நாளடைவில் இனிப்பு கொழுக்கட்டை, கார கொழுக்கட்டை என்று பல விதமாக பரிமாணம் எடுத்தது.

விநாயகரும் அறிவியலும்:
சரி கதைக்கு வருவோம். ஒரு விநாயகர் சதுர்த்தியில் விநாயகர் அதிகமாக கொழுக்கட்டையை சாப்பிட்டு விட்டார். அது இரவு நேரம் வேறு. அதிகம் சாப்பிட்டதால் நடக்க முடியாமல் திணறிய விநாயகர் கீழே விழுந்து விட்டார். இதை பார்த்த சந்திரன் சிரித்துவிட்டார் அதனால் கோவமடைந்த விநாயகர் சந்திரனை பார்த்து "நீ அழகாய் உள்ள ஆணவத்தில் தானே என்னை பார்த்து சிரிக்கிறாய் அதனால் நான் உன்னை சபிக்கிறேன் மாதத்தில் தேய்ந்து தேய்ந்து ஒருநாள் தெரியாமல் போய்விடுவாய் மீண்டும் வளர்ந்து வளர்ந்து ஒருநாள் மட்டுமே தெரிவாய்" என்றார் விநாயகர். இதனால் தான் மாதம் ஒரு முறை பௌர்ணமியும் அம்மவாசையும் வருகிறது. விநாயகர் சபிப்பதற்கு முன்னாள் வரை தினமும் பௌர்ணமியாகவே இருந்ததாம். பார்த்தீர்களா? இது தான் விநாயகரின் சக்தி.

எங்கள் கல்லூரியில் உள்ள விநாயகர் கோவிலில் பக்த்தர்கள்(மகளிர்) கூட்டம் "என்னடா இன்று விநாயகர் சதுர்த்தியா?" என்று சந்தேக்கப்படும் அளவுக்கு அலைமோதும். இந்த பக்தர்கள் தினமும் வருவதையும் போவதையும் தினமும் காண்பவர் கல்லூரி watchmam. "என்னுங்க நம்ம கல்லூரியில் பகத்தர்கள் அதிக மாயிட்டே போற மாதிரி தெரியுது? இன்னைக்கு சுண்டலும் இல்லை பொங்கலும் இல்லை அப்பறம் எதற்கு இத்தனை கூட்டம்?" என்று நான் கேட்க, அவர் "அதெல்லாம் ஒன்னும் இல்லை இன்று தேர்வு நடக்கிறதாம் அதான் இத்தனை கூட்டம்" என்றார்.

இந்த பக்தர்களில் ஒருவரை கேட்டதற்கு அவர் "நான் விநாயகர கும்பிட்டிட்டு போனேன்னா நான் paas பன்னிடுவேன்" இதனால் எங்கள் கல்லூரி மாணவர்களுக்கு தெரிவிப்பது எனவென்றால் படித்தால் தான் மதிப்பெண் வருமே அன்றி கும்பிட்டால் வராது. ஆஞ்சநேயர் விவேக்குக்கு படத்தில் உதவுவதை போல நமக்கு விநாயகர் உதவுவார் என்று கனவு காண வேண்டாம் என்று கேட்டுக்கொள்வது உங்கள் நாளயவிடியல்.

Sunday, December 19, 2010

தமிழர்கள் தீயவர்கலாம்..

நம் தமிழ் இனத்தில் நல்லவர்களே பிறக்க மாட்டார்களா? நம் இனம் மட்டும் ஏன் இப்படி இருக்கிறது இப்படியெல்லாம் என்னை சிந்திக்க வைத்தது சில வரலாற்று சம்பவங்கள் தான். ஏதோ எனக்கு தெரிந்ததை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.முதலில் ராமாயணத்தில் ராவணன் கெட்டவனாக சிறப்பாக சித்தரிக்கப்பட்டான். சரி ராவணன் கெட்டவனாக இருக்கட்டும் அவன் தம்பி விபீஷணன் "தான் என்றுமே நல்லவனாக இருக்க வேண்டும்" என்று வரம் வாங்கினான். அவனும் ராவணனை ஆதரிக்காமல் நல்லவனாகவே இருந்தான். எனினும் அவன் கெட்டவனாம் காரணம், தம்பி போரில் தன் அண்ணனை ஆதரிக்கவில்லையாம். (என்ன கொடும சார் இது?)

சரி இது போகட்டும் பலர் இந்த கதையை நம்புவது கூட கிடையாது. ஆனால் நம்புமாறு ஒரு வரலாற்றை நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன். அது தான் சித்தூர் கொங்கன் படை திருவிழா. அந்தக்காலத்தில் பாலக்கடும் கொங்கு நாடும் இந்தியா பாகிஸ்த்தனை போல இருந்ததாம். 918AD யில் கொங்கு நாட்டிற்க்கும் பாலக்கட்டிர்க்கும் போர் ஆரம்பித்து விட்டது. கிழக்கில் ராசாதி ராசன் தலைமையிலான கொங்கு நாட்டு ராணுவமும் மேற்கில் ஒருங்கிணைந்த கொச்சின், சமோரின், பாலக்காடு மான்னர்களுக்கும் இடையே போர் துவங்கியது. ஒருங்கிணைந்த கேரளா ராணுவத்தின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாத கொங்கு நாட்டு ராணுவம் பின் வாங்கி போர் முடிவுக்கு வந்த்ததாம். இந்த வெற்றியைத் தான் சித்தூர் மக்கள் சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள்.

இதற்க்கு இடையில் தான் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான கதை உள்ளது. போர் நடந்த சித்தூரில்,காளியே நேராக போர் களத்திற்கு வந்து
"சித்தூர் தாண்டுனா காட்பாடி
பாலக்காட்ட சீண்டுனவன் dead body"
என்று சொல்லி கடுமையாக போரிட்டு தமிழர்களின் தாக்குதலை முரியடித்ததாம். அந்த கடவுளுக்கு மக்கள் மீதுள்ள அக்கரையை பாருங்கள். தமிழனை அளிக்க கடவுள் கூட போர் களத்திற்கு வருவாராம்.

இப்படி பட்ட கடவுள் அனைவருக்கும் பொதுவாக இருந்தால் ஈழப்போரில் தமிழனை காக்க வந்திருக்க வேண்டும் ஆனால் அப்படி எதுவும் இதுவரையில் நடக்கவில்லை இனியும் நடக்கப்போவதில்லை. தமிழனை அளிக்க துடிக்கும் இனங்கள் தான் எத்தனை எத்தனை.
இதற்க்கு காரணம் தான் என்னவோ?. இவை தமிழனின் அழிவோடு போவதில்லை. இதை சிறப்பாக கொண்டாடி மகிழ்கிறார்கள் என்பது தான் எனது வருத்தம். கொங்கன் படை கிபி 918 முதல் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த வரலாறு தமிழரில் பலருக்கு தெரிந்திருப்பதாக தெரியவில்லை. இதிலும் குறிப்பாக கொங்கு நாட்டு மன்னன் ஏன் போர் தொடுத்தான்? என்ற வரலாறு எனக்கு கிடைக்கவில்லை கிடைத்தால் அதை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இன்றைய நிலை தமிழன் அழிந்தால் அழுவதற்கு கூட ஆள் இல்லை. வழக்கம் போல உலகமே கொண்டாடி மகிழ்கிறது.

மேலும் விவரங்களுக்கு அணுகுங்கள் இதை:
http://www.webindia123.com/city/kerala/palakkad/destinations/eventsandfestivals/chitturkonganpada.htm

http://chitturfolks.webs.com/knowchittur.htm

ஒரு நாள் விடியும்.............