Thursday, October 14, 2010

காமன்வெல்த் கல்மாடி

காமன்வெல்த் என்றாலேயே இந்தியர்களுக்கு விளையாட்டை பற்றி தெரிகிறதோ இல்லையோ ஆனால் விளையாடிய கல்மடியை பற்றி நன்றாக தெரியும். இவர் பெயரில் உள்ள மாடிக்கு மட்டும் கல் இருக்கும்( கல் + மாடி) ஆனால் இவர் கட்டும் பாலத்திலோ மண் கூட இருக்காது. அப்படிப்பட்ட தலை சிறந்த கட்டிடகலை வல்லுநர் என்றே இவரை சொல்லலாம்.
அப்படியென்றால் அந்த கட்டிடம் எப்படி இருக்கும் என்று பாருங்கள். இவர் தலைமையில் கட்டப்பட்ட கட்டிடம் ஒன்று விளையாட்டு துவங்குவதற்கு முன்பே இடிந்து விழுந்த்தது ( அது தான் கீழே உள்ள படம்). தஞ்சை பெரிய கோயிலை கட்டியவர்கள் இந்த அளவுக்கு சிறந்த கட்டிடக்கலை வல்லுனர்களாக இருந்திருப்பார்களா என்பது சந்தேகம் தான். ஆகையால் இந்தியா வந்த இங்கிலாந்து மகாராணியிடம் இவருக்கு இங்கிலாந்தின் உயரிய விருதான "sir" பட்டம் வழங்க பரிந்துரை செய்கிறேன்.

மதிப்பிற்குரிய கல்மாடி விளையாட்டு துவங்குவதற்கு முன்பு விளையாட்டு வீரர்கள் தங்க கட்டப்பட்ட அறைகள் சும்மா இருக்கக்குடாது என்பதற்காக நாய்களுக்கும், பாம்புகளுக்கும் வாடகைக்கு விட்ட கருணை உள்ளம் படைத்தவர். மேலும் இவர் வீரர்கள் மீது கொண்டுள்ள அக்கரை காரணமாக " பணிகள் நடந்து வருகிறது ஆகையால் மெதுவாக ஓடவும்" என்ற விளம்பர பலகையை 100 மீ ஓடு பாதையில் வைக்க உத்தரவிட்ட மாமனிதர். இவரால் நீச்சல் போட்டிக்கு கட்டப்பட்ட தண்ணீர் தொட்டியை பார்த்த ஆசுறேலிய வீரர்கள் "துபாயில் இதை குப்பை தொட்டி என்பார்கள்" என்று புகழ்ந்து கூறினர். இவரால் நம் நாட்டுக்கு ஏற்பட்ட நட்பெயர்க்கு இந்த பாரதியார் பாடலை நாளைய விடியலின் சார்பாக dedicate செய்து கொள்கிறேன்.

"அசிங்கமில்லை, அசிங்கமில்லை, அசிங்கமென்பதில்லையே
இச்சகத்தில் உள்ள நாடுகளெல்லாம் சிரித்து நின்ற போதிலும்
அசிங்கமில்லை, அசிங்கமில்லை, அசிங்கமென்பதில்லையே"

இந்த தீவிர வாதிகளுக்கு அறிவே இல்லை தானாக இடிந்து விழும் கட்டிடத்துக்கு குண்டு வைப்போம், தீ வைப்போம் என்று மிரட்டி குண்டுகளுக்கு உள்ள மான மரியாதையை கெடுக்கின்றனர். ஒலிம்பிக்கில் ஒரு பதக்கம் கூட வாங்க முடியாமல் திணறும் இந்தியா இதில் மட்டும் எப்படி இத்தனை பதக்கம் வாங்குகிறது என்றால் அனைத்தும் கல்மாடியின் தீரிய சிந்தனையே, மற்ற நாட்டு விளையாட்டு வீரர்கள் தங்குவதற்கும், சாப்பிடுவதக்கும் சரியாக தராவிட்டால் அவர்களால் சரியாக விளையாட முடியாது அனைத்து பதக்கத்தையும் நாமே சுருட்டிவிடலாம் என கணக்கு போட்டார். இப்படி கணக்கு போட்டு எதிரிகளை புறமுதுகு காட்டி ஓடவைத்ததால் இன்று முதல் நீ எங்களால் "காமன்வெல்த் கல்மாடி" என்று பாசத்தோடு அழைக்கப்படுவாய்.

பாப்பம்பட்டிக்கும், எப்ப்பம்பட்டிக்கும் இடையே நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் சானியா மிர்சா வென்ற பதக்கங்களை இந்தியா பாகிஸ்த்தான் எல்லையான வாகாவில் வைத்து சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மொத்த காமன் வெல்த் போட்டிகளின் சிறப்பே இலங்கை அதிபர் வருவதுதான் இவர் வருகையை தடுக்க எந்த தமிழனாலும் முடிவதே இல்லை. எது எப்படியோ வீரர்கள் குவித்த பதக்கத்தை நினைத்து பெருமை படுவீர்களோ அல்லது கல்மாடியை பற்றி வருந்துவீர்களோ அது உங்களுக்குத்தான் தெரியும்.


Sunday, October 10, 2010

மலையேற்றம்....



எங்கள் கல்லூரி தேசிய மாணவர் படையில் மூன்று ஆண்டு கல்லூரி மாணவர்கள் இடம் பெறுவார்கள். தேசிய மாணவர் படையில் மலையேற்றம் போன்ற பயிற்ச்சிகள் இன்றியமையாதது.நான் மூன்றாம் ஆண்டு பிரிவை சேர்ந்தவன். இந்த மலை எற்றத்திக்கான அணைத்து பொறுப்புகளையும் NCC ஆசிரியர் மூன்றாம் ஆண்டு மாணவர்களிடம் ஒப்படைத்தார்.இதற்க்குக் காரணம் நாங்கள் முதல் வருட மாணவர்களாக இருந்த போது மலையேற்றத்திற்கு அங்கு சென்றுள்ளோம்

நாங்கள் முதல் ஆண்டில் மேற்கொண்ட பயணம் வெயில் காலம்.ஆனால் இப்போது போனது ஜூன் -செப்டம்பர் மழை முடிந்த தருணம். நாங்கள் முதலில் சென்றதற்கும் இரண்டாவது முறை சென்றதற்கும் பலவேருபாடுகளை உணர முடிந்தது. முதல் முறை நாங்கள் சென்ற போது அப்போது எங்களை வழி நடத்தியவர்களின் கொள்கை "யார் முதலில் 8 km தூரமும்,கடல் மட்டத்திலிருந்து சுமார் 900 மீ உயரமுள்ள மலை உச்சியை அடைகிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்கள்" என்பதாக இருந்தது. இதனால் முதலில் வேகமாய் மலையேற துவங்கினவர்கள் ஒரு கட்டத்தில் கால் ஓய்ந்து நிற்க கூட முடியாமல் பாதியில் திரும்பினர். மலை உச்சியை அடையாமல் பாதியில் நின்றவர்கள் அநேகம் பேர். இம்முறை நாங்களோ அனைவரும் மலை உச்சியை அடையவேண்டும் என்பதையே இலக்காக கொண்டோம், அனைவரும் இலக்கையும் அடைந்தனர்.


எங்கள் பயணம் கல்லூரியில் இருந்து காலை 6 மணிக்கு ஆரம்பமானது. நாங்கள் காலை உணவை முடித்த பின் சரியாக 8.30க்கு மலையில் ஏற துவங்கினோம் எங்கள் பாதை காடுகளுக்குள்ளும், கட்களுக்குள்ளும் வளைந்து, வளைந்து சென்றது. 9.15 மணியளவில் ஒரு கோயிலை அடைந்தோம். அங்கு ஒருவரை வழிகாட்டியாக அழைத்துச்செல்ல பணிக்க அவரும் ஒப்புக்கொண்டு எங்களுடன் வந்தார்.அவர் முன்னால் செல்ல நாங்கள் அவரை தொடர்ந்தோம். அந்த இடத்தில் எங்களுக்கு விதிக்க பட்ட கட்டளைகள் இரண்டு ஒன்று அனைவரும் அணி அணியாக செல்லவேண்டும் என்பது மற்றொன்று போகும் பாதையை மறவாமல் இருக்க வழி முழுக்க அடையாளங்கள் இட வேண்டும் என்பது தான். நாங்கள் வழியில் நெல்லிக்காய் மரத்தில் இருந்த நெல்லிக்காயை சாப்பிடும் வாய்ப்பு கூட கிட்டியது.


எங்கள் வழிகாட்டி தொடர்ந்து "யானைகள் ஜாக்கிரதை" என்று எச்சரித்து வந்தார். "வாய்ப்பு கெடச்சா நானு ஆனைய காட்றன்" என்று சொன்ன வழிகாட்டியால் கடைசிவரையில் யானை சானியயை மட்டுமே காட்ட முடிந்தது. இப்படி போக ஒரு இடத்தில் அனைவரும் ஓய்வுக்காக அமர்ந்தோம் அப்போது அங்கிருந்த ஒரு சிறிய ஓடையில் மூன்றாம் ஆண்டு மாணவன் ஏதோ gemni circus கம்பனியில் இருந்து வந்தவர் போல சிறிய ஓடையில் பெரிய வித்தை காட்டினார் பிறகு வழுக்கி அந்த ஓடைக்குள்லேயே விழுந்தார் இது அனைவருக்கும் நல்ல பொழுதுபோக்காக அமைந்தது. ஒரு கிலோ மீட்டர் உயரம் போனால் 6.4 டிகிரி (165m - 1 டிகிரிஅளவு) வெப்பம் குறையுமாம் அப்படி குறைவதை உணர்ந்தோம்.

அப்படியே மலை ஏர அனைவருக்கும் கொடுக்கப் பட்டிருந்த மதிய உணவை 12.30 மணியளவில் சாப்பிட்டுவிட்டு தொடர்ந்து முன்னேற துவங்கினோம் ஒரு வழியாக கடைசியில் மலை உச்சியை 1.10க்கு அடைந்தோம்.அந்த மலை உச்சியில் இருந்து பார்த்தால் ஒரு பக்கம் திருமூர்த்தி அணையும் மறுபக்கம் ஆழியார் அணையும் தெரியும் இந்தமுறை மேக மூட்டம் அதிகம் இருந்ததால் திருமூர்த்தி அணையை பார்க்க முடியவில்லை.அனைவரும் அங்கு பல புகைப்படம் எடுக்க திடீர் மழை மற்றும் காற்று அடித்ததால் 2 மணி வரை அங்கு இருப்பதாக இருந்த திட்டம் மாற்றி 1.40 க்கே திரும்பவேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டது. அந்த தருணத்தில் வந்த பாதையின் அடையாளம் தெரியவில்லை இதனால் செய்வதறியாது நின்றோம். எனினும் எந்த வித பயத்தையும் வெளிக்காட்டாமல் இருந்த மூன்றாம் அண்டு மாணவர்களில் ஒருவர் பாதையை கண்டுபிடித்தார்.

ஒருவகையான நிம்மதியுடன் இரங்க துவங்கினோம். வரும் வழியில் மழைக்கு நினைந்த பாறைகள் வழுக்கி விடும் பாறைகளாகவே இருந்தது. அப்படி வரும் வழியில் ஒவ்வொரு மூன்றாம் ஆண்டு படையினரும் கிட்டத்திட்ட 100 முறையாவது பார்த்துப்போ பார்த்துப்போ என்று சொன்னதை அனைவரும் கவனித்திருப்பார்கள்.ஒரு வழியாக 4.00 மணிக்கு கோயிலை அடைந்திருப்போம். எங்கள் ராஜ யோகம் அந்த கோயிலில் அன்னதானம் போட்டார்கள் நாங்களும் இருந்து விழாவை சிறப்பித்து வந்தோம். வரும் வழியில் மலை அடிவாரத்தில் இருந்த ஒரு சிறிய கோயிலை கடக்க நேர்ந்தது. அங்கு தமிழில் அர்ச்சனை செய்வதை பலரும் கவனிக்கவில்லை (நானும் கூட) இரண்டாம் ஆண்டு மாணவன் அதை கவனித்து சொன்னதோடு அதை பாடமாக்கியே தீரவேண்டும் என்றதால் அது உடனே படமாக்கப்பட்டது.
இப்படி இனிதே முடிந்தது இந்த மலையேற்றம்.

இதில் இருந்து நாம் என்ன தெரிந்து கொண்டோம் என்பதை நான் கண்டிப்பாக தெளிவு படுத்தியே தீர வேண்டும். "ஆயிரம் இடங்கள் சென்றவர்களும், ஆயிரம் புத்தகம் படித்தவர்களும் புத்திசாலி ஆவார்கள்" என்பது சீன பழமொழி. இந்த பயணத்தில் நாம் தெரிந்து கொண்டது ஏராளம்.
1.ஒளி கூட ஊடுருவாத காடுகளுக்குள் நம் படை ஊடுருவியது, பல நீர் நிலைகளை கடந்தோம், பல பாறைகளில் வழுக்கி விழுந்தோம். எனினும் நாம் நிற்கவில்லை எத்தனை தடைகள் வந்தாலும் இலக்கை அடைந்தே தீர வேண்டும் என்ற உறுதியோடு தொடர்ந்தோம் அடைந்தோம். இதனால் தன்னம்பிக்கை அதிகமாகும்.
2.இது (அணி அணியாக சென்றது) ஒரு கூட்டு முயற்சி இதனால் அணியோடு ஒத்து உழைக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.
3.ஒவ்வொரு இடத்திலும் மற்றவர்கள் சரியாக வருகிறார்களா என்று மற்றவர்களை பற்றி சிந்தித்துக்கொண்டே வந்தோம் இதனால் மற்றவர்கள் மீதுள்ள அக்கறை அதிகமாகும் இதுவே பிற்காலத்தில் நல்ல குடிமகனை உருவாக்கும்.
4.அழகிய காடுகளையும், மிருகங்களையும் கண்ட நமக்கு இயற்கை மீது கொண்ட ஆர்வம் அதிகமாகும் இதனால் இயற்கையை பாதுகாப்போம்.

இந்த நாளை பற்றி முழுமையாக கூற வேண்டுமானால் பத்திகள் இன்னும் பல நீளும் என்பதால் இதோடு நிறைவு செய்கிறேன். இந்த கருத்துகள் அனைத்தும் நம் கல்லூரி மாணவர்க்கு எழுதப்பட்டது. இதில் உங்களுக்கு மாற்று கருத்தோ அல்லது இன்னும் சேர்க்க வேண்டிய கருத்துக்கள் என்று உங்களிடம் இருந்தால் அதை பின்னூட்டத்தில்(comment) தெரிவியுங்கள்.உங்களிடம் இருந்து பின்னூட்டங்களை எதிர்பார்கிறேன்.

Thursday, October 7, 2010

முத்து மணி மாலை...

நம்ம இந்தியா வரலாற்றை பற்றி சொல்லனுமா என்ன?.. இது வரைக்கும் ஒரு நாட்டு மேல படைஎடுத்துருப்போமா?(தமிழர்களை தவிர) நாம யாருக்கு என்ன பாவம் பண்ணுனோம்? ஏன் நமக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்குது என்று என்னை சிந்திக்க வைத்தது இந்த முத்து மணி மாலைதான். முத்து மணி மாலை..... என்று பாட்டை மட்டும் கேட்டு பழகிய நமக்கு இது புதுசு தான். அது தான் சீனா வின் string of pearls strategy. இது இந்தியாவை சுத்தி வளைத்து இந்திய பெருங்கடலிலும்,அரபு நாடுகளிலும் ஆதிக்கம் செலுத்துவது தான் இதன் முக்கிய நோக்கமே.

இப்படி நம் நாட்டை சுற்றி வளைக்க தங்களால் முடிந்ததை செய்வது நமது அருகில் உள்ள நாடுகளான இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், மியான்மர், நேபாளம் தான். இப்படி நாலு பக்கமும் சுத்தி வளைச்ச நாம எங்கதான் போறது.

போரா ஒரே அக்கபோர் என்று நினைப்பது நம் பண்பாடு அதனால் தான் மீனவர்கள் செத்தாலும் சரி, நம் இனத்தவர்கள் செத்தாலும் சரி நாம் எதுவும் கேட்க மாட்டோம். "செவியில் சங்கு வைத்து முழங்கினும் நீண்ட துயில் கொள் தமிழா.." என்று சொன்னது தமிழருக்கு சரியாக பொருந்தும். கும்பகர்ணன் கூட 6 மாதத்திற்கு பிறகு விழிப்பான் ஆனால் 600 ஆண்டுகுக்கு மேல்(பாண்டியர் வீழ்ச்சிக்குப் பின்) தூங்கும் தமிழர் தூங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இன்றைய தமிழர்களிடம் எந்திர்ரா(விழித்தெழு) எந்திர்ரா(விழித்தெழு) என்றால் எந்திரா எந்திரா என்று திரைப்படத்தின் பெயரையே சொல்லுவார்கள் என்பது திண்ணம்.