Thursday, July 15, 2010

எட்டாக் கல்வி .........

இன்று கல்வித்துறையை ஒரு நல்ல வியாபாரமாக்கிவிட்டர்கள். கல்லூரிகளும், பள்ளிகளும் தரமான கல்வியை தருகிறதோ இல்லையோ ஆனால் பணத்தை கொள்ளையடிக்கும் முதலைகளாகவே இருக்கிறது. அதாவது ஆத்தங்கரையிலும், குளத்தங்கரையிலும் உதயமாகும் பல கல்விநிறுவனங்கள் ஆக்ஸ்போர்ட் அளவுக்கு பணத்தை வாங்குகிறது. இதனால் பல மாணவர்களுக்கு கல்வி கிடைக்காமல் போகிறது.
பல கல்வி நிறுவனங்கள் ஆரம்பமான பிறகு தான் கட்டிடமே கட்ட ஆரம்பிக்கின்றனர். இப்பொழுது கட்டிடப் பொருள்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் வரும் காலத்தில் செங்கல்லும், சிமென்டும் யார் கொடுக்கிறார்களோ அவர்களுக்கே சீட் கொடுப்பார்கள். இந்த நிறுவனங்கள் குறைந்த செலவில் சிக்கனமாக செயல்பட நினைப்பதால் குறைந்த சம்பளம் யார் கேட்கிறார்களோ அவர்களையே பணியில் அமர்த்துகிறது. இப்படி நிர்வாகம் நிர்னைக்கும் ஆசிரியர்கள் மாணவர்களை மிரட்டுவதே " பேசினால் நான் பாடம் நடத்த ஆரம்பித்து விடுவேன்" என்றுதான். இந்த ஆசிரியர்கள் மாணவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் முறையே தனி a=b+c கரெக்ட் என்றும் a=c+b தவறு என்றும் தான் சொல்லித்தருவார்கள். இப்படிப்பட்ட ஆசிரியர்களிடம் படிக்கும் மாணவர்கள் இப்படித்தான் இருப்பார்கள்.

தம்பி:அண்ணா மாடியில் உள்ள லைட்(light) எரியமாட்டிங்குது, ஆனால் கீழே இருக்கும் லைட் எரிகிறது, ஏன்?
படித்த அண்ணன்: தம்பி கரண்ட் கமியாக வருது அதனால் கரன்ட்டால் மேட்டுல மாடிக்கு எரமுடியல கீழே உள்ள லைட் பள்ளத்தில் உள்ளதால் கரண்ட் ஈசியாக போகிறது அதனால் கீழ் லைட் எரிகிறது.

படிக்கும் திறமை இருக்கக்கூடிய ஏழை மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் கல்வியளிக்க கல்விநிறுவனங்கள் முன்வரவேண்டும். நல்ல கல்விநிறுவனங்கள் உயர்ந்த மரத்திலே பழுத்த உதவாத கனியாக இருக்க கூடாது.

Sunday, July 11, 2010

மக்கள் தொகை

எந்த ஒரு உயிரினத்தையும் பண்ணை வைத்து வளர்தலும் கூட நூறு ஆண்டுகளில் ஐநூறு சதவிதமாக உயராது அனால் அப்படி உயர்ந்த ஒரே உயிரினம் இந்திய மனிதர்கள் தான்.கடந்த நூறு ஆண்டுகளாக கண்ணும் கருத்துமாக மக்கள் தொகையை பெருக்கியவர்கள் உத்திரப்ரதேச மக்கள் தான்.இன்று உத்திரப்ரதேச மக்கள் தொகை பிரேசில் நாட்டு மக்கள் தொகைக்கு சமமாக உள்ளது.உத்திரப்ரதேச மக்கள் தொகையை விட வெறும் ஐந்து நாடுகளின் மக்கள் தொகைதான் அதிகம். உத்திரப்ரதேச மக்களுக்கு தமிழக மக்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை காட்ட தமிழகத்திலும் மக்கள்தொகை தொடர்ந்து பெருகி வருகிறது. இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் நல்ல சான்று. "ஊருக்கு ஒரு தலைவர் இருக்கலாம் ஆனால் தலைவருக்கு ஒரு ஊரே இருக்க கூடாது" என்று படிப்பறிவு இல்லாத தமிழ் தலைவர்களுக்கு புரியவைக்க வேண்டும்.

நம் நாட்டில் அரசு உதவி இல்லாமல் தானே வளர்வது மக்கள் தொகை மட்டும் தான்.விண்ணில் உள்ள நட்சத்திரங்களை எண்ணுவதுகூட சுலபம் அனால் மக்கள் தொகையை கணக்கெடுப்பது ரொம்ப கஷ்டம் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பவர்கள் கதறுகிறார்கள்.பல கோடி செலவழித்து மக்கள்தொகையை கணக்கெடுக்கும் ஒரே நாடு நம் நாடாகத்தான் இருக்க முடியும்.இந்திய புலிகளின் எணிக்கை 1500ரை விட குறைவாகவே உள்ளது அவை இந்திய புலிகளே இல்லை காரணம் அவை இந்திய புலிகளாக இருந்தால் குருகியகாலத்திற்க்குள் பல்லாயிரக்கணக்காக பெருகியிருக்கும்.

உட்பத்திதிரன் அதிகமாக வேண்டும்,மனிதவளம் வேண்டும் என்று தொழில் வளர பலர் சொன்னதை மக்கள் தவறாக புரிந்துகொண்டார்களோ என்னவோ மனித உற்பத்தியில் நம்மை முந்த உலகில் எவனும் இல்லை.குப்பை தொட்டியில் கூட குழந்தை கிடக்கும் பெருமைக்கு உரிய ஒரே நாடு நம் நாடுதான்.இதில் ஒரு நல்ல நேரம் சீன மக்கள் தொகை நம்மைவிட அதிகம் என்று பலருக்கு தெரியாது தெரிந்தால் நாட்டுப்பற்று மிக்க பலர் அவர்களை முந்த தங்களால் முடிந்த அளவு முயற்சிப்பார்கள்.

இன்னும் ஐம்பது ஆண்டுகளில் இந்தியாவில் மக்கள் தொகை மேலும் இருமடங்காக பெருகும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.இப்பொழுதே பேருந்துகள் குப்பை லாரி கேரளாவுக்கு அடிமாடுகளை ஏற்றிசெல்வதுபோல காட்சியளிக்கிறது ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு எப்படி இருக்குமோ.............இன்று ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுக்கும் தமிழக அரசு விரைவில் ஒருவருக்கு ஒரு அரிசி கொடுக்கும் திட்டத்தை அமல் படுத்தினாலும் வியப்பதற்கு இல்லை.

Thursday, July 8, 2010

அகதி ....


1959இல் திபதிய மக்கள் தலாய்லாமாவுடன் ஆயிரக்ககணக்கில் இந்தியாவுக்கு அகதிகளாக வந்தனர்.
வந்தாரை வாழவைக்கும் இந்தியா அவர்களுக்கு ஆதரவு கொடுத்தது.கர்நாடகாவில் உள்ள பய்ளகுப்பே(Bylakuppe) என்ற இடத்தில் இந்திய அரசு 3000 ஏக்கர் நிலம் ஒதுக்கி அவர்களுக்கு அணைத்து உதவியும் செய்துவருகிறது.தரமான கல்வி,மருத்துவம் என்று தன் நாட்டு மக்களுக்கு ராமம் போட்டாலும் அவர்களுக்கு நிறையவே செய்கிறது இந்திய அரசு.இன்று பய்ளகுப்பே(Bylakuppe)இல் மட்டும் 14,000பேர் வசிக்கின்றனர்.இன்று பய்ளகுப்பே "குட்டி திபத்" என்று சொல்லும் அளவுக்கு திபத் ஆகவே மாறிவிட்டது.

நீங்களே குட்டி திபத்த பாருங்க "குட்டி திபத்"

இது இருக்கட்டும் இனி நம்ம கதைக்கு வருவோம் எல்லாம் நம்ம அப்பாவி ஈழ மக்கள் பற்றித்தான்.துயில் இல்லாத இரவுகள்,எங்கும் அழு
குரல்,பார்க்கும் திசை எல்லாம் இரத்தம்,தோண்டும் இடமெல்லாம் கன்னிவெடிகள்,
உயிர் இழந்து, உடமைகளை இழந்து நமது சொந்தங்கள் கைகொடுப்பார்கள் என்று எண்ணி கடல் கடந்து வந்தவர்கள்.அவர்களை தமிழர்கள் என்று பார்ப்பதை விட தீவிரவாதிகளோ என்ற சந்தேகத்துடன் மட்டுமே இந்திய அரசு பார்க்கிறது .இத்தாலியில் இருந்து இறக்குமதியான சோனியா காந்தி வளர்க்கும் நாய் தெற்கு பார்த்து குரைத்தால் கூட ஈழத்தமிழர்களால் ஆபத்து என்று சொல்லி அவர்களை வெளியே கூட வர அனுமதிப்பதில்லை.இந்த குற்றப்பார்வையை இந்திய அரசு கைவிடவேண்டும்.
திபத்தியர்களுக்கு கொடுக்க கூடாது என்பது என்னுடைய கருத்து இல்லை அனால் தமிழ் ஈழ மக்களையும் திபத்தியர்களை போல் நடத்த வேண்டும் என்பதே என்னுடைய கருத்து.இப்பொழுது இலங்கையில் திவிரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டது. இனியாவது நமது அரசு தாராளமாய் உதவ முன்வரவேண்டும்.