Wednesday, January 19, 2011

அன்புள்ள முதல்வருக்கு...........

பொங்கலுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு ஆவதற்கு காரணம் விழா நாளின் போது அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான். அப்படி சிறந்த நகைச்சுவை பட்டிமன்றம் ஒன்று ஒளிபரப்பு ஆனது அதன் தலைப்பு "கலைஞரின் புகழுக்கு காரணம் அவரது சமூக தொண்டு, இலக்கிய பணி, அரசியல் சாதனை". இந்த தலைப்பில் தீ.க, காங்கிரஸ், தீ.மூ.க கட்சியை சேர்ந்த பலர் பேசினர் ஆகையால் இந்த பட்டிமன்றம் முழுவதும் நகைச்சுவைக்கு பஞ்சமில்லாமல் இருந்தது. இதில் ஆளுக்கு ஒரு தலைப்பில் புதுகோட்டை விஜயா, தமிழச்சி தங்கபாண்டியன், பீட்டர் அல்ப்போன்ஸ், பொன்முடி, ஜகத் ரத்ச்சகன், துறை முருகன், கீ.வீரமணி என அனைவரும் பேசினர். இதில் சுப.வீரபாண்டியனும், கனிமொழியும் பேசியது என்னை மிகவும் கவர்ந்தது.

கனிமொழி சமூக தொண்டு என்று ஆரம்பித்து சிலநிமிடங்கள் வரை "அவர் ஏன் மேடையில் அழுகிறார்?" என்ற கேள்வியோடு பார்த்து கொண்டிருந்தேன் பிறகு தான் தெரியவந்தது அவர் அழவில்லை பேசுகிறார் என்று. அவர் பேச ஆரம்பித்தவுடன் "தமிழருக்கு சூடு பிறக்க வேண்டும் சுரணை பிறக்க வேண்டும் என்று கலைஞர் சமூக தொண்டு ஆற்ற வந்தவர் என்றார்" இதை கேட்ட எனக்கு சிரிப்பை அடக்க இரண்டு நிமிடம் ஆனது.

சுப.வீரபாண்டியன் பேசியது "பம்பரம் கலைங்கருக்கு சின்னமாக இருப்பதை விட்டுவிட்டு யார் யாருக்கோ சின்னமாக இருக்கிறது என்றார்" காரணம் இவர் பம்பரம் மாதிரி சுழல்கிராராம். பத்தாத குறைக்கு "நிர்க்கமுடியாதவன் எல்லாம் நிற்பேன் என்கிறான்" என்று விஜயகாந்தை ஜாடையாக சொன்னார். இப்படியே அனைவரும் கலைங்கருக்கு கடைசிவரை ஜால்ரா போட்டதை முதல்வர் கண்சிமிட்டாமல் பார்த்து பூரித்துக்கொண்டிருந்தார்.
இறுதியாய் அன்பழகன் தீர்ப்பு என்று ஒன்றை சொல்ல இனிதை முடிவடைந்தது சிறப்பு நகைச்சுவை பட்டிமன்றம்.

கேரளா, கர்நாடக, ஆந்த்ரா என்று சொன்னால் உதடுகள் கூட ஒட்டாது தமிழகம் என்று சொன்னால்தான் உதடுகள் கூட ஒட்டும் என்று சிறப்பான கவிதையை பாடி தமிழர்களுக்கு தமிழ் நாட்டின் பெருமையை உணர்த்தியவர். ரயில் வராது என்பதை உறுதி படுத்தியபின் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தவர்.இப்படி இவர் சாதனைகள் அளப்பரியது.

பொங்கலுக்கு இரண்டு நாள்களுக்கு முன்னாள் தான் தமிழக மீனவர் கொலை சிங்கள ராணுவம் அட்டூழியம் என்பதை பார்த்தோம். இவர் இது நாள் வரை கடிதத்தை எழுதுகிறாரே அன்றி எந்த பயனும் இல்லை. அந்த இன வெறி பிடித்த சிங்களவன் கொல்வதை நிறுத்துவது போல் தெரியவில்லை. பிராந்திய வல்லரசான இந்திய மீனவனுக்கே இந்த நிலை என்றால் ஈழத்தமிழரை பற்றி நாம் நினைக்க வேண்டும். தன் மக்கள் அவலத்தை வைத்து அரசியல் பண்ணும் கேடு கெட்ட அரசியல் தமிழக அரசியலாகத்தான் இருக்கும். ஐந்து நிமிட உண்ணா விரதத்தினால் முப்பது ஆண்டு போரை நிறுத்தத்திற்கு கொண்டு வந்த சர்வ வல்லமை படைத்த அரசியல்வாதி இவராகத்தான் இருக்கமுடியும். எப்படியேனும் வாகுகளை பெற வேண்டும் என்பதே இவர்களின் கொள்கை.

இலவசம், இலவசம் என்று எதற்கு எடுத்தாலும் இலவசம். கையாலாகாத சோம்பேறிகளுக்குத்தான் இந்த இலவசம் தேவையே அன்று நமக்கு அல்ல. இப்படி நீங்கள் கொடுப்பதை வாங்கிக்கொள்ள நாங்கள் உங்கள் பட்டி நாய்கள் அல்ல என்பதை அவர்களுக்கு விளங்க வைக்க வேண்டும். உழைக்காமல் வரும் ஊதியம் அதிக நாள் நிலைக்காது என்று அவர் படிக்கவில்லையோ என்னவோ? நமக்கு தெரியவில்லை. உலக தமிழரின் தலைவரான இவர் ஈழ தமிழருக்கு என்ன செய்தார் என்பதை அனைவரும் பார்த்தோம். நாற்ப்பது தொகுதிகளிலும் வெற்றி பெற்ற கட்சியாய் இருந்தும் இவரால் எதுவும் செய்ய முடியவில்லை. இவரால் தமிழகம் என்ன பயன் அடைந்ததோ?. இவர் நொடிக்கு நொடி உலக தமிழரின் தலைவன் என்று சொல்லும் போது ஈழ தமிழர்கள் சிரிக்க மாட்டார்கள். களப்பிரர்களுக்கு பிறகு தமிழகத்துக்கு இதுவே இருண்டகாலமாக இருக்க முடியும்.

நம் தமிழர்களின் நிலை தான் என்னே! பரிதாபமானது ஆங்கிலேயருக்கு அடிமையாக இருந்தோம், பிறகு பார்பனரின் ஆதிக்கம், பிறகு சினிமாவின் ஆதிக்கம், அடுத்தது இவர் குடும்பத்திற்கு ஆதிக்கம் கை மாறுமே அன்றி தமிழர்களின் அடிமை நிலையில் எந்த மாற்றமும் இல்லை. "காலுக்கு செருப்பும் இல்லை பசித்த பிள்ளைக்கு பாலும் இல்லை உழைத்து உழைத்து மண்ணாய் போனோமட தமிழா" என்று வேதனை படும் விவசாய்கள் எத்தனை. இது தான் தமிழக அரசியலும் தமிழகமும்.

இந்த தமிழர் திருநாளில் நாம், இனவெறி பிடித்த சிங்களனுக்கு சொல்வது இது தான் "இலச்சம் பேர் மடிந்தாலும், ஆயிரம் ஆயிரம் பேர் முள் வேலிக்குள் கிடந்தாலும் தமிழரின் தன்மானத்தை, இன உணர்வை, வீரத்தை எவனாலும் அழிக்க முடியாது. இன்று உங்கள் கை ஓங்கியிருக்கிறது. உயிரிழந்த அப்பாவி தமிழர்களும், மீனவர்க்கும் மண்ணில் விழுந்த விதைகளாக மீண்டும் எழுவார்களே அன்றி குப்பையை போல் மக்கிப்போக மாட்டார்கள். நீங்கள் வென்றதாய் கனவில் கூட நினைக்க வேண்டாம்".

என்றாவது ஒரு நாள் விடியும். இந்த நிலை மாறும் தமிழர்கள் மகிழ்ச்சியாய், அரசியல் உரிமைகளோடு, சுதந்திரமாய், சுரண்டல் இல்லாத சமுதாயமாய், நல்ல தலைவர்களோடு, மானத்தோடு வாழும் நாளும் வரும். நமது லச்சியமில்லாத பயணம் இப்படி ஒரு இலக்கு நோக்கி பயணிக்கட்டும். இதுவே இந்த தமிழர் திருநாளில் நம் உறுதிமொழியாக இருக்கட்டும்.

3 comments:

  1. மிகவும் நன்றாக உள்ளது..,நண்ணும் இந்த உறுதி மொழியை எடுத்து கொள்கிறேன்.,

    ReplyDelete