Sunday, August 22, 2010

நிலா சுருங்குகிறது....

நிலா சுருங்குகிறது....

நிலவின் வயது கிட்டத்திட்ட 4.5 பில்லியன் ஆண்டுகள். கடந்த ஒரு பில்லியன் வருடங்களாக நிலவு சுருங்கிக்கொண்டுதான் இருக்கிறது இன்றளவும் சுருங்கி வருகிறது. ஆனால் இந்த சுருக்கம் வெறும் 100 மீட்டர் அளவுதான் என்றும் இதனால் பெரும் பாதிப்பு நிகழாது என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

நிலவு உருவாகும் போது அதன் மத்தியில் வெப்பம் அதிகமாய் இருந்தது என்றும் அந்த வெப்பம் தொடர்ந்து குறைந்து வருவதே இந்த சுருக்கத்திற்கு காரணம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நாசா விண்வெளி ஆய்வு மையம் மேற்கொண்ட ஆய்வில் பல இடங்களில் இந்த சுருக்கம் தென்படுவதாக கூறுகின்றனர்.நிலவில் ஏற்ப்பட்டுள்ள சில சுருக்கங்கள் பல மயில் அளவுக்கு நீண்டுள்ளது என்றும் தெரிவிக்கின்றனர்.மெர்குரி போன்ற கோள்களில் இந்த சுருக்கம் சமீப காலத்தில் மிகவும் அதிகமாக தென்படுகிறதாம்.
இப்படியே சுருங்கிக்கொண்டு போனால் வரும் காலங்களில் நிலவின் நிலைமையும் நம்(தமிழன்) நிலை போல ஆகிவிடும் முதலில் இந்தியா முழுவதும் தமிழ் இருந்தது (சிந்து சமவெளி), பிறகு தமிழகம் மற்றும் இலங்கை, இப்போது தமிழரின் பரப்பு மேலும் சுருங்கி தமிழகம் மட்டும் தான் என்று ஆகிவிட்டது.

மேலும் காண்க:
http://www.nasa.gov/mission_pages/LRO/news/shrinking-moon.html
http://hindu.com/2010/08/21/stories/2010082152261300.htm

Wednesday, August 18, 2010

பிளாஸ்டிக்


பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகளை பற்றி அறியாமலேயே நம்மில் பலர் அதை பயன்படுத்துகிறோம். இன்று சிறு குழந்தைகள் குடிக்கும் பால் குவளையில் இருந்து வயதானவர்கள் பயன்படுத்தும் பொருள்கள் வரை அனைத்திலும் பிளாஸ்டிக் பொருள்களை காணலாம். பிளாஸ்டிக்கால் ஏற்படும் நன்மையை விட தீமையே அதிகம். குறிப்பாக பிளாஸ்டிக் பைகள்(plastic carry bags) ஏற்படுத்தும் மாசு மிகவும் அதிகம். பிளாஸ்டிக் பொருள்கள் மறு சுழற்ச்சிக்கு உட்படுத்தப்படுபவை இதனால் மீண்டும் மீண்டும் மாசு ஏற்படுமே அன்றி இதனால் மாற்றம் ஏதும் வராது. குப்பையில் இருக்கும் பிளாஸ்டிக் பைகள் காற்றுக்கு பலவாரு பறந்து செல்கிறது. இப்படி போகும் பிளாஸ்டிக்கை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது எரித்தல் காற்றை மாசு படுத்தும், புதைத்தாலும் ஒன்றும் ஆகாது. இப்படி யாருக்கும் அடங்காத பிளாஸ்டிக்கை பற்றி யாரும் பேசுவதில்லை. இதை கலைஞர் தொலைக்காட்சி பாணியில் சொன்னால் இப்படித்தான் சொல்லவேண்டும் "தமிழர்களே! தமிழர்களே! நீங்கள் என்னை கடலில் தூக்கி போட்டாலும் கூட சாகமாட்டேன் பிளாஸ்டிக்காகத்தான் மிதப்பேன் நீங்கள் கட்டுமரத்தில் கூட ஏறி பயணம் செய்ய முடையது". இதை புரிந்து கொண்ட ராஜஸ்த்தான் அரசு பிளாஸ்டிக் பொருள்களை ஆகஸ்ட் 1 முதல் தடை செய்தது. நமது குடிமக்களை பற்றி நன்கு அறிந்த ராஜத்தான் முதல்வர் கடும் சட்டங்களை போட்டுள்ளார். இதில் தடை செய்யப்பட பிளாஸ்டிக் பைகளை பயன் படுத்தினால் சுற்றுசூழல் பாதுகாப்பு சட்டம் 15 இன் படி ஐந்து வருடம் சிறை அல்லது ஒரு இலட்சம் அபராதம் அல்லது இரண்டுமே என்று ஆடி மாத சிறப்பு செய்தியாக அறிவித்தார். சீனா பிளாஸ்டிக் பைகளால் ஏற்படும் மாசை வெள்ளை புரட்சி என்று மக்களிடம் விழிப்புணர்வு ஏற்ப்படுத்துகிறார்கள் நம் நாட்டிலோ அந்த அளவுக்கு விழிப்புணர்வு இல்லை இந்த விழிப்புணர்வை நாம் தான் ஏற்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் பொருள்களை பயன் படுத்துவதை நாம் குறைத்துக்கொண்டால் பிளாஸ்டிக்கின் உற்பத்தி குறையும் பிறகு பிளாஸ்டிக் இல்லாத நிலைமை வரும் மேலும் பிளாஸ்டிக் பொருள்களை தடை செய்ய அரசு முன்வரவேண்டும்.இப்படி செய்தல் பிளாஸ்டிக் இல்லாத தமிழகம் மலரும்.

Tuesday, August 3, 2010

ஐநா சபையின் உறுப்பினர்களாக தற்போது 195 நாடுகள் உள்ளன. இப்போது பொது செயலாளர் பதவியிலுள்ள பான்- கி-மூன் இலங்கையில் நடந்த யுத்தத்தை உண்மையாக ஆராய்ச்சி செய்ய மூன்று பேர் கொண்ட குழுவை ஜூன் 23-ஆம் தேதி அமைத்தார்.அந்தக்குழுவின் தலைவராக இந்தோநேசியாவைச்சேர்ந்த மர்சுக்கி-ட்ருஸ்-மேன், தென் ஆப்ரிக்காவை சேர்ந்த யாஸ்மீன்-சூ-கா என்ற சட்ட நிபுணரும், ஸ்டீபன் ராண்டன் என்ற அமெரிக்க வழக்கறிஞரும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இதற்க்கு முன்பு இன்னொரு வரலாற்று சிறப்பு மிக்க சம்பவம் குறிப்பிடத்தக்கதாகும். இலங்கை போரில் போர் குற்றங்களும், மனித உரிமை மீறல்களும் வெளிப்படையாக தெரியும் படி நிகழ்ந்ததாக ஒரு விமர்சனம். இம்மாதிரியான நிகழ்வுகளைப்பற்றி விசாரணை செய்யும் ஒரு அமைப்பு 1979-இல் தொடங்கப்பட்டது .31 நாடுகளை சேர்ந்த சட்ட வல்லுநர், எழுத்தாளர், சமூகத் தொண்டர், நோபல் பரிசு பெற்றவர்கள் என ஐந்து பேர் இந்த அமைப்பை தொடங்கினர்.
இந்த அமைப்பின் சிறப்பே இது விருப்பு வெறுப்பு இல்லாமல் விதி மீறல்களை மட்டுமே கண்டு பிடிக்கும் அமைப்பாக செயல்பட்டு வருவதுதான்.இந்த அமைப்பு இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்துள்ளனவா? என்பதைக் கண்டறிய சர்வதேச புகழ்பெற்ற 10 சட்ட நிபுணர்களை நீதிபதிகளாக நியமித்து விசாரணை நடத்தியது.

இந்தப் 10 நீதிபதிகளில் இந்தியாவை சேர்ந்தவர்கள் இருவர் நீதிபதி சச்சார் ஒருவர் மற்றொருவர் வீ .ஆர். கிருஷ்ணய்யர். இந்தக் குழு அதிபர் ராஜபக்சே போர்க் குற்றவாளி என்றும், மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்தவர் என்றும் தீர்ப்பளித்தது.

இதன் பின்னர்தான் மனித உரிமை மீறல்களையும், போர் விதி மீறல்களையும் ராஜபக்சே இழைத்துள்ளாரா என ஆய்வு செய்ய ஐநா மூவர் குழுவை நியமித்தது. இந்த மூவர் குழு இலங்கைக்கு சென்று ஆய்வு நடத்திய பிறகுதான் தீர்ப்பு வெளியாகும்.இந்த ஆய்வை மேற்க்கொள்ள யுத்தம் நிகழ்ந்த வவுனியா, யாழ்ப்பாணம், வன்னிக்காடு, முள்ளிவாய்க்கால் வரை அணைத்து இடங்களையும் பார்வையிட வேண்டும். அங்குள்ள மக்களிடம் விசாரணை செய்ய வேண்டும்.முக்கம்களில் உள்ள மக்களுக்கு சுகாதார வசதிகள், உணவு, மருந்துகள் முறையாக கிடைக்கின்றன
வா
என்று பார்க்கவேண்டும்.

ஐநாவால் உண்மை என்று கூறப்படும் வீடியோ இங்கு இணைக்கப்பட்டுள்ளது ஆனால் இதை உண்மை இல்லை என்று மறுக்கிறது சிங்கள அரசு.

சொந்த நாட்டிலேயே அகதிக்கலாக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 3 இலட்சமா, 2 இலட்சமா, ஐம்பது ஆயிரமா என்பதை சரியாக கணக்கிட வேண்டும்.இந்தியா வழங்கிய 500 கோடி மக்களுக்கு சென்று சேர்ந்ததா என்று கண்டறிய வேண்டும்.2009 மே 18 தேதியன்று யுத்தம் முய்வுக்கு வந்தது இன்றோடு ஒரு வருடம் மூன்று மாதம் ஆகிறது இதுவரை எந்த பத்திரிக்கை நிருபர்களும், தொலைக்காட்சி நிருபர்களும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.

அதுமட்டும் அல்ல ஐநா அமைத்த மூவர் குழுவைக்கூட அனுமதிக்க மாட்டோம் என்று இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பெரிஸ் அறிவித்துள்ளார். இலங்கை வீட்டு வசதித்துறை அமைச்சர் விமல் வீரவன்சா இந்த மூவர் குழுவை எதிர்த்து உன்ன விரதம் மேட்க்கொண்டர் மேலும் புத்த துறவிகள் இந்தர்க்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். அந்தத் துறவிகள் முதலில் சிங்களர்கள் பிறகு தான் அவர்கள் துறவிகள். துறவியான பிறகும் கூட அவர்களால் சிங்கள இன வெறியை துறக்க முடியவில்லை.

பாலஸ்தீனப் பிரச்சினையில் இஸ்ரேலுக்கு எதிராக குரல் கொடுக்கிறது இந்தியா, கிர்கிஸ்தானில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குரல் கொடுக்கிறது இந்தியா, அப்பாவித் தமிழர்களுக்கு வீடு கட்டிக்கொடுக்க 1000 கோடி ரூபாய் வழங்கியுள்ளது, அப்பாவித் தமிழர்களை மீண்டும் குடியமர்த்த கோரிக்கை வைக்கிறது. ஆனால் ஐநா குழு பற்றி கருத்து சொல்லாமல் தவிர்த்து வருகிறது.

நம் இந்தியா தான் போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும். தமிழ் ஈழத்தில் சுதந்திரமாக ஆய்வு நடத்த ஐநா குழுவிற்கு அனுமதி தரவேண்டும் என்று இந்தியா குரல் கொடுக்க வேண்டும்.