Wednesday, September 22, 2010

காதலர் தினம்.......

இன்றைய கல்லூரிகளில் காணப்படும் காதலை பற்றி சொல்லவாவேணும் படிப்பதற்கு கல்லூரிவரும் மாணவர்கள் காதலிக்க ஆரம்பிற்பது வினோதமானது. இப்படி காதலிக்க வைப்பதில் நண்பர்களின் பங்கு மகத்தானது.ஒரு மாணவன் எதார்த்தமாக ஒரு மாணவியிடம் பேனா, பென்சில் வாங்கிவிட்டால் போதும் அவர் நண்பர்களுக்குத் தான் கொண்டாட்டம் காரணம் அவர்கள் அந்த மாணவியை பற்றி அவனிடம் திரும்ப திரும்ப பேசி எப்படியாவது காதலை வரவைத்து விடுவார்கள்.

செல் கம்பனி ஓடுவதற்கு காரணமே இவர்கள் தான் என்று நான் நினைக்கிறேன்.இப்படி காதலிப்பவர்கள் செல்போனில் பேசுவதை தான் பொறுத்துக்கொள்ள முடியாது இவர்கள் இரவு முழுவதும் செல் போனில் பேசுவார்கள் பகலில் நேரில் பேசுவார்கள் இப்படி 24 மணி நேரம் பேசும் இவர்கள் பாட வேளைகளில் தூங்குவார்கள். இப்படி இவர்கள் என்னதான் பேசுவார்கள் என்ற சந்தேகம் என்னை என் நண்பனிடம் இந்த கேள்வியை கேற்க செய்தது.


நான்:மாப்ளே இவ்வளவு நேரமா பேசுனையே உங்க ஊர்காரங்க அத்தன பேர் கிட்டயும் பேசுனைய?

நண்பன்: இல்லடா என்னோட காதலிகிட்ட பேசுனன்

நான்: ஓ.. அப்படி என்னடா இவ்வளவு நேரமா பேசுன?

நண்பன்:அவங்க அம்மா இன்னைக்கு தேங்காய் போடாம தேன்காசட்டினி செஞ்சாங்களாம் அதான் எப்படி செஞ்சாங்கன்னு கேட்டேன்.

கடவுள் தூணிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார் என்பார்கள் ஆனால் தூணுக்கு தூண் இவர்கள் இருப்பார்கள்.கலூரிகளில் எந்த விழ வந்தாலும் முதலில் இவர்களுக்குத்தான் கொண்டாட்டம்(ஆசிரியர் தினமாக இருந்தாலும் கூட) காரணம் பல பாட வேலைகள் விழாவிற்காக ஒதுக்கப்படும் அந்த நேரத்தை சிறிதும் வீணாக்காமல் இவர்கள் பேசுவார்கள்.

காதல் என்ற தலைப்பிலேயே ஒரு படம் வெளிவந்தது.இந்த படத்தில் காதலர்கள் சேர்ந்தால் என்ன கஷ்டம் வரும் பிரிந்தால் என்ன கஷ்டம் வரும் என்பது தெளிவாக கூறப்பட்டிருக்கும் இந்த படத்தை பார்த்துவிட்டு காதலர் பேசும் வீர வசனம் குறிப்பிடத்தக்கது. எத்தன காதல் தண்டபாணி வந்தாலும் நம்ம காதல பிரிக்க முடியாது என்பார்கள். இந்தப் படத்தை இவர்கள் தவறாக புரிந்து கொண்டதே இதற்க்கு காரணம். இதற்க்கு இந்தகதையை சான்றாக சொல்லலாம்.

"ஒரு பள்ளியில் ஒரு ஆசிரியர் விடிய விடிய அரிச்சந்திர புராணத்தை நடத்தினாராம் பிறகு அங்கு அமர்ந்திருந்த ஒரு மாணவனை பார்த்து இந்த கதையில் இருந்து நீ என்ன தெரிந்து கொண்டாய் என்று கேட்டார் அதற்க்கு அந்த மாணவன் ஐயா ஒரு பொய் சொன்னால் நமக்கு இத்தனை துன்பம் வராது அதனால் நாம் அனைவரும் பொய்சொல்ல வேண்டும் என்றான்" துன்பம் வந்தாலும் பொய்சொல்ல கூடாது என்ற கருத்தை அந்த மாணவன் எப்படி புரிந்து கொண்டான் என்று பாருங்கள்.

ஒரு சில காதல் வெற்றியில் முடிந்தாலும் பெரும்பாலான காதல் தோல்வியில் தான் முடிகிறது. காதலித்து சேர்ந்தால் உறவினர்களோடு குழப்பம் அப்படியே காதலை மறந்து வாழ்ந்தாலும் குழப்பம். ஆகையால் காதலித்து நேரத்தையும்,பணத்தையும் வீணாக்குவதை விட வேண்டும் என்பது என்னுடைய கருத்து.

இன்னும் இவரது கருத்தையும் பாருங்கள்

click here வில்லவன்

Sunday, September 5, 2010

இந்தியா ஒரு கோழிப்பண்ணை

இந்தியா 120 கோடி கோழிகள் வாழும் ஒரு கோழிப்பண்ணை. கோழிகளில் பலவகை உண்டு அது பிராயிளர் கோழி, போண்டா கோழி, நாட்டு கோழி, வாண்கோழி, நெருப்புக்கோழி, முட்டை கோழிபோன்றவை இதே போல இந்தியகோழிகளிலும் தமிழ் கோழி, மலையாளகோழி, கன்னட கோழி,மராட்டிய கோழிஎன்று பல பிரிவுகள் உள்ளன. அதில் மிகவும்முக்கியமான பிரிவு இரண் டு அவை ஆரியகோழி மற்றும் திராவிட கோழி.

இந்த அணைத்து கோழிகளையும் வெள்ளை கோழி
பறக்க வி
டாமல் 1947வரை அடிமைப்படுத்தி வைத்திருந்தது.1947க்கு பிறகு அணைத்து கோழிகளும் சுதந்திரமாய் வாழ்ந்தது. ஒருநாள் அணைத்து கோழிகளுக்கும் ஒரு சந்தேகம் வந்தது "கோழியில் இருந்து முட்டை வந்ததா? அல்லது முட்டையில் இருந்து கோழி வந்ததா? "என்ற சந்தேகம்தான் அது. இதில் இறுதியாக ஆரிய கோழிகள் கய்பர் கணவாய் தாண்டி பறந்து வந்த அயல் நாட்டு கோழிகள் திராவிட கோழி இந்த மண்ணிலேயே பரம்பரை பரம்பரையாய் முட்டை வைத்து குஞ்சு பொறித்து வாழ்ந்து வரும் பாரம்பரிய கோழிகள் என்ற முடிவு வந்தது.இதனால் ஆரிய கோழிகள் ஏமாந்து போனது.

நிலைமை இப்படி இருக்க இந்த கோழிகளுக்கு இடையே எந்த மொழியில் கூவ வேண்டும் என்று ஒரு பிரச்சனை வந்தது இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆரிய கோழிகள் அணைத்து கோழிகளும் இந்தியில் தான் கூவ வேண்டும் என்று வற்புறுத்தியது இதை அறிந்த திராவிடக் கோழிகள் முக்கியமாக தமிழ் கோழிகள் நாங்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக தமிழில் தான் கூவி வருகின்றோம் இப்பொழுது மட்டும் நாங்கள் இந்தியில் கூவ வேண்டுமா? என்று போராட்டம் செய்தது. இதன் விளைவாக "கோழிகள் கூவுவது இதில் யாரும் குரிக்கிடக்குடாது இந்தியக் கோழிப்பண்ணையில் வாழும் அனைத்துக் கோழிகளும் தங்கள் விருப்பம் போல எந்த மொழியில் வேண்டுமானாலும் கூவலாம்" என்று முடிவு வந்தது. இந்த போராட்டத்தை சிறப்பாக நடத்தியது திராவிட கோழிகள் முன்னேற்ற கழகமும், தராவிட கோழிப்பண்ணை உரிமையாளரும் தான்.பிறகு தமிழ் நாட்டு கோழிகள் அனைத்துமே திராவிட கோழிப்பண்ணையின் கட்டுப்பாட்டுக்கு வந்தது.

பிறகு சில காலம் அணைத்து கோழிகளும் நாம் தமிழ் கோழிகள் நமக்குள் எந்தப் பாகுபாடும் இல்லை என்று ஒரே இனமாக வாழ்ந்தது.காலப்போக்கில் சில கோழிகள் நாங்கள் பிரயிளர் கோழிகள் நாங்கள் தான் உயர்ந்த கோழிகள் என்றது, இல்லை நாங்கள் வாண் கோழிகள் நாங்கள் தான் உயர்ந்தவர்கள் என்றது சில கோழிகள் இப்படியே கோழிகள் ஜாதி வாரியாக கோழிப்பண்ணைகளை ஆரம்பித்தது. இந்த கோழிப்பண்ணைகளில் முக்கியமானது பாட்டாளிகளின் கோழிப்பண்ணை தான்.இந்தப் பண்ணைகளின் சிறப்பே பண்ணையாய் பறந்து மற்ற பண்ணையில் காலத்திற்கு ஏற்றவாறு மாரி மாரி 5 ஆண்டுகளுக்கு சேர்ந்துகொள்ளும்.

பாரதியார் அன்றே கோழிகளை பார்த்து கோழிகளில் ஜாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடினார் இன்னும் பலர் அணைத்து கோழிகளும் முட்டையில் இருந்து தான் வருகிறது அணைத்து கோழி முட்டையும் வெள்ளை நிறம்தான் இறுதியில் அணைத்து கோழிகளும் பிரியாணி ஆகத்தான் போகிறது இதில் நமக்குள் என்ன வேறுபாடு என்று வேற்றுமைகளை ஒழிக்க பாடுபட்டது.இதற்க்கு எதிராக நடக்கும் வகையில் இன்றைய கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கோழிகளை ஜாதி வாரியாக கணக்கு எடுக்க வேண்டும் என்கிறார்கள்.

இப்படிப்பட்ட தமிழர்களின் ஒற்றுமையைபார்த்த சிங்களக்கோழிகள் இலங்கையில் வடக்கே இருக்கும் தமிழ் கோழிகள்சிக்கன் குன்யாவை பரப்புகிறது என்றுநிறைய கோழிகளை கொன்றுவிட்டது. பாதி தமிழ் கோழிகள் கனடா, ஸ்காண்டிநேவியா பண்ணைகளுக்குபறந்து சென்றுவிட்டது. இந்தசிங்களக்கோழிகள் தமிழ் மீனவர்களைகூட நிம்மதியாக மீன் பிடிக்க விடமாட்டேன் என்கிறது.

இன்னும் வரும் காலங்களில் பல கோழிப்பண்ணைகள் வருவது போல்தென்படுகிறது.இப்படி தொடர்ந்து கோழிப்பண்ணைகள் வருவதால் ஒற்றுமைஇன்னும் அதிகமாகுமோ? ஆயிரம் கோழிப்பண்ணை இருந்தாலும் கோழிகளைகாக்க ஒரு நல்ல கோழிப்பண்ணையும்,ஒரு உண்மையான கோழிப்பண்ணைஉரிமையாளர்களும் இல்லை என்பது தான் உண்மை.படிக்கின்ற நாமாவதுவேற்றுமைகளை அகற்றி ஒன்று படுவோம்.