எங்கள் கல்லூரி தேசிய மாணவர் படையில் மூன்று ஆண்டு கல்லூரி மாணவர்கள் இடம் பெறுவார்கள். தேசிய மாணவர் படையில் மலையேற்றம் போன்ற பயிற்ச்சிகள் இன்றியமையாதது.நான் மூன்றாம் ஆண்டு பிரிவை சேர்ந்தவன். இந்த மலை எற்றத்திக்கான அணைத்து பொறுப்புகளையும் NCC ஆசிரியர் மூன்றாம் ஆண்டு மாணவர்களிடம் ஒப்படைத்தார்.இதற்க்குக் காரணம் நாங்கள் முதல் வருட மாணவர்களாக இருந்த போது மலையேற்றத்திற்கு அங்கு சென்றுள்ளோம்
நாங்கள் முதல் ஆண்டில் மேற்கொண்ட பயணம் வெயில் காலம்.ஆனால் இப்போது போனது ஜூன் -செப்டம்பர் மழை முடிந்த தருணம். நாங்கள் முதலில் சென்றதற்கும் இரண்டாவது முறை சென்றதற்கும் பலவேருபாடுகளை உணர முடிந்தது. முதல் முறை நாங்கள் சென்ற போது அப்போது எங்களை வழி நடத்தியவர்களின் கொள்கை "யார் முதலில் 8 km தூரமும்,கடல் மட்டத்திலிருந்து சுமார் 900 மீ உயரமுள்ள மலை உச்சியை அடைகிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்கள்" என்பதாக இருந்தது. இதனால் முதலில் வேகமாய் மலையேற துவங்கினவர்கள் ஒரு கட்டத்தில் கால் ஓய்ந்து நிற்க கூட முடியாமல் பாதியில் திரும்பினர். மலை உச்சியை அடையாமல் பாதியில் நின்றவர்கள் அநேகம் பேர். இம்முறை நாங்களோ அனைவரும் மலை உச்சியை அடையவேண்டும் என்பதையே இலக்காக கொண்டோம், அனைவரும் இலக்கையும் அடைந்தனர்.
எங்கள் பயணம் கல்லூரியில் இருந்து காலை 6 மணிக்கு ஆரம்பமானது. நாங்கள் காலை உணவை முடித்த பின் சரியாக 8.30க்கு மலையில் ஏற துவங்கினோம் எங்கள் பாதை காடுகளுக்குள்ளும், கட்களுக்குள்ளும் வளைந்து, வளைந்து சென்றது. 9.15 மணியளவில் ஒரு கோயிலை அடைந்தோம். அங்கு ஒருவரை வழிகாட்டியாக அழைத்துச்செல்ல பணிக்க அவரும் ஒப்புக்கொண்டு எங்களுடன் வந்தார்.அவர் முன்னால் செல்ல நாங்கள் அவரை தொடர்ந்தோம். அந்த இடத்தில் எங்களுக்கு விதிக்க பட்ட கட்டளைகள் இரண்டு ஒன்று அனைவரும் அணி அணியாக செல்லவேண்டும் என்பது மற்றொன்று போகும் பாதையை மறவாமல் இருக்க வழி முழுக்க அடையாளங்கள் இட வேண்டும் என்பது தான். நாங்கள் வழியில் நெல்லிக்காய் மரத்தில் இருந்த நெல்லிக்காயை சாப்பிடும் வாய்ப்பு கூட கிட்டியது.
எங்கள் வழிகாட்டி தொடர்ந்து "யானைகள் ஜாக்கிரதை" என்று எச்சரித்து வந்தார். "வாய்ப்பு கெடச்சா நானு ஆனைய காட்றன்" என்று சொன்ன வழிகாட்டியால் கடைசிவரையில் யானை சானியயை மட்டுமே காட்ட முடிந்தது. இப்படி போக ஒரு இடத்தில் அனைவரும் ஓய்வுக்காக அமர்ந்தோம் அப்போது அங்கிருந்த ஒரு சிறிய ஓடையில் மூன்றாம் ஆண்டு மாணவன் ஏதோ gemni circus கம்பனியில் இருந்து வந்தவர் போல சிறிய ஓடையில் பெரிய வித்தை காட்டினார் பிறகு வழுக்கி அந்த ஓடைக்குள்லேயே விழுந்தார் இது அனைவருக்கும் நல்ல பொழுதுபோக்காக அமைந்தது. ஒரு கிலோ மீட்டர் உயரம் போனால் 6.4 டிகிரி (165m - 1 டிகிரிஅளவு) வெப்பம் குறையுமாம் அப்படி குறைவதை உணர்ந்தோம்.
அப்படியே மலை ஏர அனைவருக்கும் கொடுக்கப் பட்டிருந்த மதிய உணவை 12.30 மணியளவில் சாப்பிட்டுவிட்டு தொடர்ந்து முன்னேற துவங்கினோம் ஒரு வழியாக கடைசியில் மலை உச்சியை 1.10க்கு அடைந்தோம்.அந்த மலை உச்சியில் இருந்து பார்த்தால் ஒரு பக்கம் திருமூர்த்தி அணையும் மறுபக்கம் ஆழியார் அணையும் தெரியும் இந்தமுறை மேக மூட்டம் அதிகம் இருந்ததால் திருமூர்த்தி அணையை பார்க்க முடியவில்லை.அனைவரும் அங்கு பல புகைப்படம் எடுக்க திடீர் மழை மற்றும் காற்று அடித்ததால் 2 மணி வரை அங்கு இருப்பதாக இருந்த திட்டம் மாற்றி 1.40 க்கே திரும்பவேண்டிய கட்டாயம் ஏற்ப்பட்டது. அந்த தருணத்தில் வந்த பாதையின் அடையாளம் தெரியவில்லை இதனால் செய்வதறியாது நின்றோம். எனினும் எந்த வித பயத்தையும் வெளிக்காட்டாமல் இருந்த மூன்றாம் அண்டு மாணவர்களில் ஒருவர் பாதையை கண்டுபிடித்தார்.
இப்படி இனிதே முடிந்தது இந்த மலையேற்றம்.
இதில் இருந்து நாம் என்ன தெரிந்து கொண்டோம் என்பதை நான் கண்டிப்பாக தெளிவு படுத்தியே தீர வேண்டும். "ஆயிரம் இடங்கள் சென்றவர்களும், ஆயிரம் புத்தகம் படித்தவர்களும் புத்திசாலி ஆவார்கள்" என்பது சீன பழமொழி. இந்த பயணத்தில் நாம் தெரிந்து கொண்டது ஏராளம்.
1.ஒளி கூட ஊடுருவாத காடுகளுக்குள் நம் படை ஊடுருவியது, பல நீர் நிலைகளை கடந்தோம், பல பாறைகளில் வழுக்கி விழுந்தோம். எனினும் நாம் நிற்கவில்லை எத்தனை தடைகள் வந்தாலும் இலக்கை அடைந்தே தீர வேண்டும் என்ற உறுதியோடு தொடர்ந்தோம் அடைந்தோம். இதனால் தன்னம்பிக்கை அதிகமாகும்.
2.இது (அணி அணியாக சென்றது) ஒரு கூட்டு முயற்சி இதனால் அணியோடு ஒத்து உழைக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கும்.
3.ஒவ்வொரு இடத்திலும் மற்றவர்கள் சரியாக வருகிறார்களா என்று மற்றவர்களை பற்றி சிந்தித்துக்கொண்டே வந்தோம் இதனால் மற்றவர்கள் மீதுள்ள அக்கறை அதிகமாகும் இதுவே பிற்காலத்தில் நல்ல குடிமகனை உருவாக்கும்.
4.அழகிய காடுகளையும், மிருகங்களையும் கண்ட நமக்கு இயற்கை மீது கொண்ட ஆர்வம் அதிகமாகும் இதனால் இயற்கையை பாதுகாப்போம்.
இந்த நாளை பற்றி முழுமையாக கூற வேண்டுமானால் பத்திகள் இன்னும் பல நீளும் என்பதால் இதோடு நிறைவு செய்கிறேன். இந்த கருத்துகள் அனைத்தும் நம் கல்லூரி மாணவர்க்கு எழுதப்பட்டது. இதில் உங்களுக்கு மாற்று கருத்தோ அல்லது இன்னும் சேர்க்க வேண்டிய கருத்துக்கள் என்று உங்களிடம் இருந்தால் அதை பின்னூட்டத்தில்(comment) தெரிவியுங்கள்.உங்களிடம் இருந்து பின்னூட்டங்களை எதிர்பார்கிறேன்.
இந்த நாள் என் வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நாளாக அமைந்தது ....................
ReplyDeleteஎங்கள் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு மிகுந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம் ........
hi , i want all the list of names who have slipped
ReplyDeleteFantastic job dude,hats off!!!
ReplyDeleteGo ahead All The Best
Good job guys
ReplyDeletethanks for not including name machi....
ReplyDeleteleo.......
nicly u have shared ur experience.....
ReplyDeleteby seeing ur post i also want to visit that place...