நிலா சுருங்குகிறது....நிலவின் வயது கிட்டத்திட்ட 4.5 பில்லியன் ஆண்டுகள். கடந்த ஒரு பில்லியன் வருடங்களாக நிலவு சுருங்கிக்கொண்டுதான் இருக்கிறது இன்றளவும் சுருங்கி வருகிறது. ஆனால் இந்த சுருக்கம் வெறும் 100 மீட்டர் அளவுதான் என்றும் இதனால் பெரும் பாதிப்பு நிகழாது என்றும் விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
நிலவு உருவாகும் போது அதன் மத்தியில் வெப்பம் அதிகமாய் இருந்தது என்றும் அந்த வெப்பம் தொடர்ந்து குறைந்து வருவதே இந்த சுருக்கத்திற்கு காரணம் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நாசா விண்வெளி ஆய்வு மையம் மேற்கொண்ட ஆய்வில் பல இடங்களில் இந்த சுருக்கம் தென்ப
டுவதாக கூறுகின்றனர்.நிலவில் ஏற்ப்பட்டுள்ள சில சுருக்கங்கள் பல மயில் அளவுக்கு நீண்டுள்ளது என்றும் தெரிவிக்கின்றனர்.மெர்குரி போன்ற கோள்களில் இந்த சுருக்கம் சமீப காலத்தில் மிகவும் அதிகமாக தென்படுகிறதாம்.இப்படியே சுருங்கிக்கொண்டு போனால் வரும் காலங்களில் நிலவின் நிலைமையும் நம்(தமிழன்) நிலை போல ஆகிவிடும் முதலில் இந்தியா முழுவதும் தமிழ் இருந்தது (சிந்து சமவெளி), பிறகு தமிழகம் மற்றும் இலங்கை, இப்போது தமிழரின் பரப்பு மேலும் சுருங்கி தமிழகம் மட்டும் தான் என்று ஆகிவிட்டது.
மேலும் காண்க:
http://www.nasa.gov/mission_pages/LRO/news/shrinking-moon.html
http://hindu.com/2010/08/21/stories/2010082152261300.htm
very nice ....
ReplyDeletethe way u express the news was nice...
really well da. comedy with news always rocks so you follow this da....
ReplyDelete